மும்பை: 2024-25ம் நிதி ஆண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.17,439.6 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக பி.என்.பி. அறிவித்துள்ளது. 2023-24ம் நிதி ஆண்டு லாபமான ரூ.8,328.9 கோடியை விட 2024-25ல் பஞ்சாப் நேஷனல் வங்கி லாபம் 109% அதிகரித்துள்ளது. 2025 ஜன.-மார்ச் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.4,642.9 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேமிப்புக் கணக்கில் மொத்தம் டெபாசிட் தொகை ரூ.4,98,429 கோடியாக உயர்ந்துள்ளது. குறித்த கால வைப்புத் தொகை ரூ.9,93,080 கோடியாகவும் உயர்ந்துள்ளதாக பி.என்.பி. தகவல் தெரிவித்துள்ளது.
The post பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் ரூ.17,439.6 கோடி: பி.என்.பி. அறிவிப்பு appeared first on Dinakaran.