
தர்மசாலா,
இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று இரவு நடைபெறும் 58-வது ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறது.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகள் எடுத்துள்ளது.
இந்த நிலையில், தர்மசாலாவில் தற்போது மழை பெய்து வருவதால் இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.