
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் உலகம் முழுவதும் பிரபலமானார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சலார் மற்றும் கல்கி 2898 ஏடி ' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து 'ஸ்பிரிட், சலார் 2, தி ராஜா சாப்' ஆகிய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், பிரபாஸ் அடுத்ததாக இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். பிரசாந்த் வர்மா பாலையாவின் மகன் கதாநாயகனாக நடித்த 'ஹனுமன்' படத்தை இயக்கினார். இப்படம் நல்லவரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பிரபாஸின் புதிய படம் சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. பிரபாஸ்-பிரசாந்த் வர்மா கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தினை ஹோம்பளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பாாக்கப்படுகிறது.