பஞ்சாபில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தமிழக கபடி வீராங்கனையை நடுவர் தாக்கியதால் பரபரப்பு: புகார் அளித்த பயிற்சியாளர் கைது

2 weeks ago 4

சண்டீகர்: பஞ்சாபில் பல்கலைக்கழகங்கள் இடையிலான கபடி போட்டியில் பங்கேற்ற தமிழக வீராங்கனையை போட்டி நடுவர் தாக்கியதால் பரபரப்பு நிலவுகிறது. பஞ்சாபில் பல்கலைக்கழகங்கள் இடையிலான கபடி போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டிகளில் தமிழகத்தில் இருந்து, அன்னை தெரசா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் சார்பில் சென்ற மாணவியர் பங்கேற்று வருகின்றனர்.

அன்னை தெரசா பல்கலை – பீகாரின் தர்பங்கா பல்கலை மாணவியர் பங்கேற்ற கபடி போட்டி நேற்று முன்தினம் நடந்தது. அப்போது தமிழக வீராங்கனையை பீகார் வீராங்கனை ஒருவர் முரட்டுத்தனமாக தள்ளி விட்டுள்ளார். போட்டி விதிப்படி அந்த செயல், ஃபவுல் என்பதால் போட்டி நடுவரிடம் தமிழக வீராங்கனை புகார் கூறியுள்ளார். ஆனால், அந்த புகாரை ஏற்காமல் வாக்குவாதம் செய்த நடுவர், ஒரு கட்டத்தில் தமிழக வீராங்கனை மீது தாக்குதல் நடத்தி உள்ளார்.

இதை கண்டித்து தமிழகத்தை சேர்ந்த மற்ற வீராங்கனைகள் குரல் எழுப்பி உள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் அடிதடி நடந்துள்ளது.
இதன் உச்ச கட்டமாக, இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்த அன்னை தெரசா பல்கலை கபடி பயிற்சியாளரை போலீசார் கைது செய்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்தால் போட்டி நிறுத்தப்பட்டது. இது குறித்து தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள், பஞ்சாப் அதிகாரிகள் மற்றும் போட்டி நடத்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தமிழகத்தை சேர்ந்த கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

The post பஞ்சாபில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தமிழக கபடி வீராங்கனையை நடுவர் தாக்கியதால் பரபரப்பு: புகார் அளித்த பயிற்சியாளர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article