பசுமை ஒலிம்பியாட் தேர்வு ஏப்ரல் மாதம் நடக்கிறது - யு.ஜி.சி. அறிவிப்பு

2 months ago 8

சென்னை,

பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் மணீஷ் ஆர்.ஜோஷி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நாட்டில் இளம் தலைமுறையினரிடையே சுற்றுச்சூழல் கல்வியை ஊக்குவிக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையிலும், எரிசக்தி மற்றும் வள நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும், 'பசுமை ஒலிம்பியாட் பார் இளைஞர்கள்' எனும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில், நாடுமுழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்று தேர்வுகளை எழுதுகின்றனர். தேர்வில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் மாணவர்களுக்கு பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 'பசுமை ஒலிம்பியாட் பார் இளைஞர்கள்-2025' என்ற தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கி உள்ளது. 18 வயது முதல் 30 வரையிலான மாணவர்கள் இந்த தேர்வுக்கு வருகிற மார்ச் 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பசுமை ஒலிம்பியாட் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடத்தப்படுகின்றன. தேர்வில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மின்னணு சான்றிதழ் வழங்கப்படும். சிறப்பான பங்களிப்பை வழங்கும் முதல் 3 மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும். உயர்கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் பசுமை ஒலிம்பியாட் தேர்வில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article