பங்குனி உத்திரம்: குலதெய்வ கோவில்களில் குவிந்த மக்கள்

1 week ago 5

பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம் சேரும் நாளை பங்குனி உத்திரம் என்கிறோம். குலதெய்வ வழிபாட்டிற்கு பங்குனி உத்திரம் உகந்த தினமாகும்.

அரிக்கும், சிவனுக்கும் பிறந்தவர் தான் அரிகரபுத்திரன் என்ற சாஸ்தா. இந்த சாஸ்தாவை அய்யனார், சாஸ்தா என்று பல பெயர்களில் அழைப்பார்கள். இந்த சாஸ்தா பங்குனி உத்திரத்தன்று தான் அவதரித்தார். இதனால் தான் பங்குனி உத்திரத்தன்று தென்மாவட்ட மக்கள், தங்களின் குலதெய்வமான சாஸ்தாவை வழிபட்டுவது வழக்கம்

இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான பங்குனி உத்திரம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் பங்குனி உத்திரம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சாஸ்தா, அய்யனார் கோவில்களில் நேற்று இரவே குவிந்த மக்கள் இரவு அங்கு தங்கினர். பின்னர், கோவில்களில் பொங்கல் வைத்தும், ஆடு,கோழிகளை பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நெல்லை, தூத்துக்குடியில் உள்ள சாஸ்தா, அய்யனார் கோவில்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

Read Entire Article