
திருத்தணி,
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். எனவே விடியற்காலை 3 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்களின் வாகனங்களால் மலைக்கோவிலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் வாகனங்கள் மலைகோவிலுக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாக முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி தெரிவித்துள்ளார். பங்குனி உத்திர திருவிழாவில் பங்கேற்க நேற்று மாலையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் முருகன் மலைக் கோவிலில் குவிந்தனர்.