பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.4.92 லட்சம் கோடி இழப்பு

2 months ago 10

மும்பை: இந்திய பங்குச்சந்தையில் நேற்று ஒரே நாளில் ரூ.4.92 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இந்திய பங்குச்சந்தையில் நேற்று தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்தது. நேற்று முன்தினம் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 384 புள்ளிகள் சரிவடைந்து 81,748 ஆக இருந்தது. 2வது நாளாக நேற்று வர்த்தக இடையில் 1,136 புள்ளிகள் வரை சரிந்தது. வர்த்தக முடிவில், முந்தைய நாளை விட 1,064 புள்ளிகள் சரிந்து 80,684 ஆக இருந்தது.

இதனால் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மதிப்பு ரூ.4,60,06,557 கோடியில் இருந்து ரூ.4,92,644 கோடி சரிந்து, ரூ.4,55,13,913 கோடியானது. முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் இது 1.3 சதவீத சரிவாகும். பாரதி ஏர்டெல், இண்டஸ் இண்ட் வங்கி, டிசிஎஸ், எச்டிஎப்சி பங்குகள் அதிகபட்ச இழப்பை சந்தித்தன. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று வரலாறு காணாத அளவுக்கு ரூ.84.90 ஆக சரிந்தது.

மேலும், அமெரிக்க பெடரல் வங்கி மற்றும் ஜப்பான், இங்கிலாந்து மத்திய வங்கிகள் வட்டி குறைப்பு உள்ளிட்ட முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்க உள்ளன. மேலும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.278.7 கோடியை வெளியேற்றினர். இதன் காரணமாக பங்குச்சந்தைகளில் நேற்று கடும் சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

The post பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.4.92 லட்சம் கோடி இழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article