பக்தர்கள் போல் திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜகவினர்!

3 hours ago 1

மதுரை: திருப்பரங்குன்றம் கோயிலைச் சுற்றிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு, மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகளையும், கெடுபிடிகளையும் மீறி அலகுகள் குத்தியும், காவடி எடுத்தும், காவி வேட்டி கட்டியும் பக்தர்கள் போன்று இந்து முன்னணி, பாஜகவினர் கோயிலுக்குள் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது போலீஸாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. போலீஸார் கண்காணிப்பில் கோட்டைவிட்டதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

திருப்பரங்குன்றம் கோயில் மலையைப் பாதுகாக்கக் கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து பிப்.3, 4-ம் தேதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. அதனால், திருப்பரங்குன்றத்துக்கு உள்ளூரில் இருந்து மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்தும் இந்து அமைப்பினர், பாஜகவினர் வருவதைத் தடுக்க மாவட்ட எல்லைகளின் அனைத்துச் சாலைகளிலும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

Read Entire Article