பக்​கவாதம் பாதிப்பு ஏற்படு​பவர்​களில் 5% மட்டுமே சரியான நேரத்​தில் சிகிச்​சைக்கு வருகிறார்கள்: மருத்​துவர் ஆர்.எம்.பூபதி தகவல்

1 month ago 5

சென்னை: உலகம் முழு​வதும் ஆண்டு​தோறும் அக். 29-ம் தேதி பக்கவாத நோய் தடுப்பு விழிப்பு​ணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி, ஓமந்​தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்​துவமனை மூளை மற்றும் நரம்​பியல் துறை சார்​பில், பக்கவாத நோய் விழிப்பு​ணர்வு பேரணி நடைபெற்​றது. மருத்​துவமனை இயக்​குநர் ஆர்.மணி தலைமை​யில் நடந்த பேரணி​யில் நரம்​பியல் சிகிச்சை பிரிவு துறை தலைவர் ஆர்.எம்​.பூபதி உட்பட மருத்​துவர்​கள், செவிலியர் மாணவிகள் பங்கேற்​றனர். பின்னர், விழிப்பு​ணர்வு கலை நிகழ்ச்​சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்​சி​யில் நரம்​பியல் சிகிச்​சைத் துறை தலைவர் மருத்​துவர் ஆர்.எம்​.பூபதி பேசி​ய​தாவது: மூளைக்​குச் செல்​லும் ரத்தக் குழாய்​களில் அடைப்பு ஏற்படு​தல், ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்தப்​போக்கு உருவாகுதல், இதயம் சரியாக வேலை செய்​யாமை மற்றும் மூளை​யி​லிருந்து கெட்ட ரத்தம் அடைபட்டு போதல் உள்ளிட்ட காரணங்​களால் பக்கவாதம் ஏற்படு​கிறது.

Read Entire Article