திருப்பூர்: ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என்று துண்டு துண்டாக ஆனது. அதன் பிறகு நரேந்திர மோடி ஓபிஎஸ்சை எடப்பாடியுடன் ஒட்ட வைத்தார். அதன்பிறகு அவரும் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது எடப்பாடி தலைமையில் அதிமுக இயங்கி வந்தாலும், அக்கட்சிக்குள் கோஷ்டி பூசல் அதிகமாகி உள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் எடப்பாடி பங்கேற்ற விழாக்களை புறக்கணித்து வருவதோடு அதிரடியாக பேட்டியும் அளித்து வருகிறார்.
இதனால் அதிமுக உட்கட்சி பூசலால் அல்லாடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. கூட்டத்திற்கு ஆள் பிடிக்க, அக்கட்சியினர், பரிசுப் பொருட்கள் தருவதாக கூவிக்கூவி அழைத்துக் கொண்டிருக்கின்றனர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி டவுன் பகுதியில் நடைபெற உள்ள ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கூட்டத்தை திரட்டுவதற்காக அதிமுகவினர் புதிய டெக்னிக்கை கையாண்டுள்ளனர்.
பொதுக்கூட்டத்திற்கு அடிக்கப்பட்ட நோட்டீஸில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சிறப்பு பரிசு என விளம்பரம் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பொதுக்கூட்டங்களுக்கு ஆள் கிடைக்காமல் குலுக்கல் முறையில் பரிசு விநியோகம் செய்வதாக கூறி ஆட்களை திரட்டுவதைக் கண்டு மற்ற கட்சியினர் சிரிப்பாய் சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
The post நோட்டீஸ் போட்டு கூவிக்கூவி அழைக்கிறார்கள்; அதிமுக கூட்டத்திற்கு வந்தால் குலுக்கல் முறையில் பரிசு: திருப்பூரில் நடக்கும் கூத்து appeared first on Dinakaran.