நைஜீரியா, பிரேசில், கயானா 3 நாடுகளில் 5 நாள் பயணம் பிரதமர் மோடி புறப்பட்டார்: ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார்

2 months ago 12

புதுடெல்லி: மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியா மற்றும் தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு 5 நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து நேற்று புறப்பட்டுச் சென்றார். இப்பயணத்தில் முதல்கட்டமாக அதிபர் போலா அகமது டினுபுவின் அழைப்பை ஏற்று நைஜீரியாவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். இது மோடியின் முதல் நைஜீரியப் பயணம். இதில் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் மோடி, அங்குள்ள இந்திய வம்சாவளிகளை சந்தித்து பேச உள்ளார்.

அதைத் தொடர்ந்து 18, 19ம் தேதிகளில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார். இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட உலக தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். அதைத் தொடர்ந்து, 20 மற்றும் 21ம் தேதிகளில், அதிபர் முகமது இர்பான் அலியின் அழைப்பை ஏற்று கயானாவுக்கு செல்கிறார். 50 ஆண்டுகளில் கயானாவுக்கு இந்திய பிரதமர் செல்ல இருப்பது இதுவே முதல் முறை. அங்கு கரீபியன் நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசும் பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார்.

The post நைஜீரியா, பிரேசில், கயானா 3 நாடுகளில் 5 நாள் பயணம் பிரதமர் மோடி புறப்பட்டார்: ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Read Entire Article