நைஜீரியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

2 hours ago 2

அபுஜா,

பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாடுகளுக்கான அரசுமுறை பயணத்தின் முதல் கட்டமாக நைஜீரியாவில் உள்ள அபுஜா நகரில் இன்று தொடங்கினார். முதல் கட்டமாக நைஜீரியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நைஜீரியா கூட்டாட்சிக் குடியரசின் தலைநகரான அபுஜாவுக்கு வந்தடைந்த பிரதமர் மோடியை, மத்திய தலைநகர் பிரதேசத்துக்கான மந்திரி நைசோம் ஜென்வோ வைக் வரவேற்று அபுஜா நகரின் திறவுகோலை வழங்கினார். நைஜீரியா மக்களால் பிரதமர் மோடிக்கு அளிக்கப்படும் நம்பிக்கை மற்றும் மரியாதைக்கான குறியீடு இது என கூறினார்.

இந்நிலையில் நைஜீரியா- இந்தியா இடையேயான உறவை வலுப்படுத்த பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பதிவில், பிரதமர் மோடி இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக நைஜீரிய அதிபருடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதற்கிடையே, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்"நைஜீரிய பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பை மேலும் ஆழப்படுத்தும்" என பதிவிட்டுள்ளார்.

நைஜீரியா பயணத்தை முடித்துவிட்டு பிரேசிலில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

Heartwarming to see the Indian community in Nigeria extending such a warm and vibrant welcome! pic.twitter.com/QYfAUOpqRO

— Narendra Modi (@narendramodi) November 16, 2024

Read Entire Article