
புதுடெல்லி,
நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல கோடி சொத்துகளை காங்கிரஸ் கட்சி அபகரித்ததாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்திருந்தாா். இதையடுத்து, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. இந்தவழக்கு கடந்த வாரம் விசாரணைகு வந்தது.
அப்போது, குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்வதற்கு முன்பு, சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோரின் கருத்துகளை அறிய அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி வழக்கை 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். இதன்படி, நேஷனல் ஹெரால்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, ராகுல் காந்தி மற்றும் சோனியாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணை வரும் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.