நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 266 இடங்கள்

2 days ago 3

பணி: அட்மினிஸ்டிரேடிவ் ஆபீசர் (ஜெனரலிஸ்ட்ஸ் மற்றும் ஸ்பெஷலிஸ்ட்ஸ் (ஸ்கேல்-1). சம்பளம்: ரூ.50,925- 96,765.
வயது வரம்பு: 01.05.2025 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
மொத்த காலியிடங்கள்: 266.

துறை வாரியாக காலியிடங்கள் விவரம்:
1. ஸ்பெஷலிஸ்ட்ஸ்:
i) டாக்டர்கள் (எம்பிபிஎஸ்): 14 இடங்கள் (பொது-4, ஒபிசி-3, எஸ்சி-4, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: எம்பிபிஎஸ் பட்டம் பெற்று, இந்திய மருத்துவ கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.
ii) சட்டம்: 20 இடங்கள் (பொது-8, ஒபிசி-7, எஸ்சி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2). தகுதி: சட்ட பாடப்பிரிவில் இளநிலை/முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
iii) நிதி: 21 இடங்கள் (பொது-8, ஒபிசி-6, எஸ்சி-3, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-2). தகுதி: சிஏ/ஐசிடபிள்யூஏ/ பி.காம்/ எம்.காம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
iv) தகவல் தொழில்நுட்பம்: 20 இடங்கள் (பொது-8, ஒபிசி-6, எஸ்சி-2, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-2). தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பி.இ., அல்லது எம்சிஏ.
v) ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்: 21 இடங்கள் (பொது-8, ஒபிசி-7, எஸ்சி-3, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2). தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் இளநிலை/முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பொது மற்றும் ஒபிசியினர் குறைந்தது 60% மதிப்பெண்களும், எஸ்சி/எஸ்டியினர் குறைந்தது 55% மதிப்பெண்களும் பெற்று பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ. 1000/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்ட எழுத்துத் தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மையங்களில் நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வு சென்னையில் நடைபெறும்.
முதற்கட்ட எழுத்துத் தேர்வு ஜூலை 20ம் தேதியும், 2ம் கட்ட தேர்வு ஆக.31ம் தேதியும் நடைபெறும்.
www.nationalinsurance.nic.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (03.07.2025).

The post நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 266 இடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article