நேற்று கலைஞர் பிறந்தநாள் செம்மொழி விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பேச்சு, கட்டுரைப்போட்டி

7 hours ago 2

கரூர், ஏப். 28: முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் விழா செம்மொழி விழாவாக கொண்டாடப்பட உள்ளதால் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளதால் வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3 ம்தேதி அன்று செம்மொழி விழாவாக கொண்டாடப்படவுள்ளது. தமிழக்கு செம்மொழி தகுதி பெற்றுத் தந்த கலைஞரின் பெருமையை போற்றிடும் வகையில் அவர் பிறந்த நாளான ஜூன் 3ம்தேதி அரசின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழி விழாவாக கொண்டாடப்படும்.

செம்மொழியின் சிறப்பையும், கலைஞரின் தமிழ்த்தொண்டின் பெருமையையும் மாணவர்களிடம் உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் 11, 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கட்டுரை, பேச்சுப் போடடிகள் நடத்தி ஜூன் 3ம்தேதி நாளன்று நடைபெறவுள்ள செம்மொழி விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாவட்ட மற்றும் மாநில அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளின் விபரம்.

11, 12ம் வகுப்பு பயிலும் பள்ளி, மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட போட்டிகள். கரூர் மாவட்டத்தில் மே 9ம்தேதி அன்று பள்ளி மாணவர்களுக்கும், 10ம்தேதி அனறு கல்லூரி மாணவர்களுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும். இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் விண்ணப்ப படிவங்களை தமிழ் வளர்ச்சித்துறையின் < https://tamilvalarchithurai.tn;gov.in > இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்தோ அல்லது கரூர் தமிழ் வளர்சசி துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக பெற்று பள்ளி தலைமையாசிரியர்கள் பரிந்துரை கடிதத்துடனும், கல்லூரி மாணவர்கள் முதல்வர், துறைத்தலைவர் பரிந்துரை கடிதத்துடனும் ஏப்ரல் 30ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி போட்டிகளில் அரசு, தனியார், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பயிலும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். கல்லூரி போட்டிகளில் கலை மற்றும் அறிவியல், கல்வியியல், பொறியியல், பல்தொழில்நுட்பம், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். காலை 9.30 மணிக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் தொடங்கும், போட்டிக்கான தலைப்புகள் போட்டியின் போது அறிவிக்கப்படும்.

செம்மொழியின் சிறப்பு மற்றும் கலைஞரின் தமிழ்த்தொண்டின் பெருமை தொடர்புடைய தலைப்புகள் வழங்கப்படும். மாவட்ட போட்டிகளில் முதல்பரிசு பெறும் மாணவர்கள் மே 17ம்தேதி அன்று சென்னையில் நடைபெறும் மாநில போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவார்கள். அதில், முதல் மூன்று பரிசு பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜூன் 3ம்தேதி அன்று நடைபெறும் செம்மொழி நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். முதல் பரிசு மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டிக்கு ரூ. 10,000, பேச்சுப் போட்டிக்கு ரூ.10,000, இரண்டாம் பரிசு கட்டுரைப் போட்டிக்கு ரூ.7000, பேச்சுப் போட்டிக்கு ரூ. 7000, மூன்றாம் பரிசு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிக்கு ரு. 5000.மாநில அளவிலான போட்டிக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ. 15,000, இரண்டாம் பரிசு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளுக்கு ரூ.10,000, மூன்றாம் பரிசு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளுக்கு ரூ. 7000.இந்த போட்டிகளில் கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நேற்று கலைஞர் பிறந்தநாள் செம்மொழி விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பேச்சு, கட்டுரைப்போட்டி appeared first on Dinakaran.

Read Entire Article