நேற்று 13 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு.. கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!!

1 week ago 4

சென்னை: நேற்று 13 உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சட்டப்பேரவைக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். தமிழக சட்டப்பேரவையில் நேற்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர் நலன் குறித்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்து பேசினார். ஆனால் அவர் பேச சபாநாயகர் அப்பாவு அனுமதிக்கவில்லை.

இதைதொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ஒரு அட்டையை தூக்கி பிடித்து அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். சட்டசபையில் இருந்து வெளியேறிய அதிமுகவினர் எதிர்க்கட்சியினரை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டினர். இந்நிலையில், சட்டசபையில் மக்கள் பிரச்சினை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்துள்ளனர்.

The post நேற்று 13 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு.. கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!! appeared first on Dinakaran.

Read Entire Article