புதுடெல்லி: நேர்மையான தேர்தலை உறுதி செய்ததற்காக தேர்தல் ஆணையத்தை பாராட்டுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறன்றும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுவது வழக்கம். 26ம் தேதி குடியரசு தின விழா என்பதால் மன் கி பாத் நிகழ்ச்சியில் நேற்று மோடி உரையாற்றினார். அவர் பேசுகையில்,‘‘ஜனவரி 25ம் தேதி தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்ட நாள்.அன்றைய தினம் தேசிய வாக்காளர் நாள் கடைப்பிடிக்கபடுகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் தேர்தல் ஆணையத்துக்கும், ஜனநாயகத்தில் மக்கள் பங்கேற்பதற்கும் மிக முக்கியமான இடத்தை வழங்கியுள்ளனர். கடந்த தசாப்தங்களில், நாட்டின் ஜனநாயகம் வலுப்பெற்றுள்ளது. வாக்களிக்கும் முறையை தேர்தல் ஆணையம் அவ்வப்போது மாற்றி நவீனப்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி மக்கள் சக்தியை வலுப்படுத்தியுள்ளது.
நேர்மையான தேர்தலை நடத்தியதற்காக தேர்தல் ஆணையத்தை பாராட்டுகிறேன்’’ என்றார். மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் மோடி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
The post நேர்மையான வாக்குப்பதிவு தேர்தல் ஆணையத்துக்கு மோடி பாராட்டு appeared first on Dinakaran.