நேரத்தை வீணாக்காமல் இருக்க பள்ளிக்குச் செல்வதை தவிர்க்குமாறு சொன்ன யூடியூபர் - கல்வித்துறை நடவடிக்கை

1 week ago 5

திருவனந்தபுரம்,

நேரத்தை வீணாக்காமல் இருக்க பள்ளிக்குச் செல்வதை தவிர்க்குமாறு சொன்ன யூடியூபர் மீது கேரள பொதுக் கல்வித்துறை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர், மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வுகள் நெருங்கி வருவதால், நேரத்தை வீணாக்காமல் இருக்க, மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதை தவிர்க்குமாறு வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவைப் பார்த்த கேரள கல்வி மந்திரி சிவன்குட்டி சம்பந்தப்பட்ட யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுக்கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பத்தனம்திட்டா கல்வித் துணை இயக்குநர், யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல்துறைத் தலைவரிடம் புகார் அளித்துள்ளார்.

மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு குறிப்பிட்ட வருகைப் பதிவு கட்டாயம் என்பதால், மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று மந்திரி சிவன்குட்டி வலியுறுத்தியுள்ளார்.

Read Entire Article