
பிரயாக்ராஜ்,
மராட்டிய மாநிலம் தானேவை சேர்ந்தவர் ஜனேஷ்வர் குமார் தியாகி (75). அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் உத்தர பிரதேச மாநில்பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவிற்கு சென்றார். அங்கு நீராடிய பின் அயோத்திக்குச் செல்லும் வழியில் அமைந்திருந்த ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு ஓட்டல் அருகே உள்ள அயோத்தி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நெடுஞ்சாலையில் வந்த பஸ் அவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கிவீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
விபத்தைக்கண்ட உள்ளூர் வாசிகள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனை செய்த மருத்துவர் ஜனேஷ்வர் குமார் தியாகி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.