நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகும் நயன்தாராவின் புதிய படம்

7 months ago 46

சென்னை,

'தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம், மண்டேலா' உள்ளிட்ட படங்களை தயாரித்த சசிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு 'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 'வொய் நாட் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் மூலம் சசிகாந்த இந்த படத்தை தயாரிக்கிறார். மாதவன், சித்தார்த், மிரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்து விட்டது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்தநிலையில், தற்போது 'டெஸ்ட்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் இல்லாமல் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிட உள்ளதாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் தயாரித்த 'ஜகமே தந்திரம்' படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article