நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவுக்கு 204 பேர் பலி

3 months ago 33

காத்மண்டு,

நேபாளத்தில் சில நாட்களாக வரலாறு காணாத வகையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி பொதுமக்களில் 204 பேர் பலியாகி உள்ளனர் என ஆயுத போலீஸ் படை தெரிவித்து உள்ளது. 89 பேர் காயமடைந்தும், 33 பேர் காணாமல் போயும் உள்ளனர்.

இதனை முன்னிட்டு, பிரதமர் அலுவலகத்தில் இன்று அனைத்து கட்சி கூட்டம் ஒன்றும் நடந்தது. இதில் மீட்பு, நிவாரண மற்றும் மறுகுடியமர்த்தும் முயற்சிகள் ஆகியவற்றை மேம்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. நேபாள ராணுவம், போலீஸ் மற்றும் ஆயுத போலீஸ் படை இணைந்து பேரிடரால் பாதிக்கப்பட்ட 4,500 பேரை இதுவரை மீட்டு உள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு, 3 நாட்கள் பள்ளிகள் மூடப்படுகின்றன என அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

நிலச்சரிவால் பெரிய நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டு, இந்தியா மற்றும் நேபாள நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் செல்வதில் தற்காலிக நிறுத்தம் ஏற்பட்டது. இதனால், அவற்றின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. பொதுமக்களும் அதிக பாதிப்புக்கு இலக்காகி உள்ளனர்.

Read Entire Article