நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர் முத்தராமலிங்க தேவர் : ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

3 months ago 14

சென்னை : பசும்பொன் முத்தராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குரு பூஜையையொட்டி அவருக்கு நன்றியுள்ள தேசம் ஆழ்ந்த மரியாதையை செலுத்துகிறது. அவர் ஒரு சிறந்த இந்திய தேசியவாதியாகவும் காலனித்துவ ஆட்சியிலிருந்து இந்திய சுதந்திரத்துக்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர். சுதந்திரத்துக்குப் பிறகு சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மற்றும் விளிம்புநிலை பிரிவினரின் உரிமைகளுக்காக போராடுவதன் மூலம் ஒரு நல்லிணக்கமான தேசத்தை அவர் கட்டியெழுப்பினார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு நெருக்கமானவராகவும் அறியப்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், தமிழ்நாட்டில் தேசிய சுதந்திர போராட்டத்தைத் தட்டியெழுப்பி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை நேதாஜியின் தலைமையில் இந்திய தேசிய ராணுவமான ஆசாத் ஹிந்த் ஃபௌஜ்-ல் சேரவும், இந்தியாவுக்காக ஆங்கிலேயர்களுடன் வீரத்துடன் போராடவும் தூண்டினார். 2047 -ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்தபாரதத்தை கட்டியெழுப்புவதற்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும் இந்த மகத்தான தேசிய வீரருக்கு தேசம் இதயபூர்வமாக அஞ்சலி செலுத்துகிறது.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர் முத்தராமலிங்க தேவர் : ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் appeared first on Dinakaran.

Read Entire Article