நெல்லையில் பைனான்ஸ் நிறுவனம் ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு

2 hours ago 1

 

நெல்லை, மார்ச் 1: நெல்லையில் பிரபல பைனான்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பாஜ பிரமுகருக்கு இழப்பிடாக ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவாக ரூ.10 ஆயிரத்தையும் சேர்ந்து ரூ.60 ஆயிரம் வழங்க மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.நெல்லை ஊருடையார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ். பாஜ மாவட்ட துணைத் தலைவர். இவர், பிரபல பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.2.50 லட்சம் கடன் பெற்று நான்கு சக்கர வாகனம் வாங்கினார். அந்த வாகனத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடும் பெற்றுள்ளார். தவணைத் தொகையை முருகதாஸ் தவறாமல் கட்டி வந்த நிலையில், அந்த வாகனம் குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் காணாமல் போனது.

இதுகுறித்து அவர் போலீஸ் முதல் தகவல் அறிக்கையை தெரிவித்ததைத் தொடர்ந்து காப்பீட்டு நிறுவனம் ஏற்கனவே ஒப்புக்கொண்டதன்படி ரூ.2.50 லட்சத்தை சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனத்திற்கு செலுத்தியது. ஆனால் அந்த பைனான்ஸ் நிறுவனம் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் கடன் தொகை ரூ.7.94 லட்சம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகதாஸ் நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நுகர்வோர் குறை தீர் ஆணைய தலைவர் கிளாஸ்டான் பிளஸ்ட் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி முன்னிலையில் நடந்தது. இதையடுத்து பைனான்ஸ் நிறுவனம் இழப்பீடாக ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவாக ரூ.10 ஆயிரமும் ஒரு மாதத்திற்குள் முருகதாசுக்கு வழங்க வேண்டும். அந்தத் தொகையை வழங்கத் தவறினால் 9 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

 

The post நெல்லையில் பைனான்ஸ் நிறுவனம் ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article