
திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் தலைமையிலான காவல்துறையினர் பள்ளிக்கோட்டை அருகே நேற்று (21.5.2025) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக, கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பள்ளிக்கோட்டை, வடக்கு தெருவை சேர்ந்த மயில் என்பவரின் மனைவியான பேச்சியம்மாள் (வயது 55) என்பவருக்கு சொந்தமான டீ கடையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கே 330 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது. மேலும் இது சம்பந்தமாக பேச்சியம்மாளை கைது செய்த போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.