நெல்லையில் பயங்கரம்: பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண் வெட்டி கொலை

3 months ago 20

நெல்லை,

நெல்லை சி என் கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் கண்ணன் குடும்பத் தேவைக்காக காளிமுத்து என்பவரிடம் கடன் வாங்கி இருக்கிறார். இந்த நிலையில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததால் காளிமுத்து கண்ணன் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் கண்ணன் காளிமுத்து மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த காளிமுத்து, கண்ணனைச் சரமாரியாக வெட்டி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த கண்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஆத்திரம் குறையாத காளிமுத்து கண்ணனின் தாய் சாவித்திரியையும் சரமாரியாக வெட்டி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த சாவித்திரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காளிமுத்து உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Read Entire Article