
திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11.5.2025 அன்று சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கீழநத்தம் செல்லும் சாலையில் உள்ள சுடலை கோவில் அருகே மறைவான இடத்தில் தென்காசி மாவட்டம், வல்லம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (வயது 22), மதுரை மாவட்டம் தாதக்கிணறு பகுதியைச் சேர்ந்த முனியசாமி(25), வெங்கடேசன்(26), கண்ணதாசன்(21), வசந்தகுமார்(24) மற்றும் முனீஸ்வரன்(25) ஆகிய 6 நபர்கள் சேர்ந்து அவ்வழியே செல்லும் வாகனங்களை வழிமறித்து நகை, பணம் கொள்ளை அடிப்பதற்காக பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கூட்டுக் கொள்ளை நடத்த திட்டம் தீட்டியது தெரியவந்தது. அதன்பேரில் அவர்களிடமிருந்து அரிவாள் ஒன்று, இரும்புகம்பி ஒன்று ஆகியவற்றை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து அவர்கள் 6 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை செய்தனர்.