
நெல்லை மாவட்டம், பத்தமடை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பத்தமடை சிவானந்தா காலணி, வெள்ளநீர் கால்வாய் பாலம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வடக்கு அரியநாயகிபுரம், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த செல்வரமேஷ் (வயது 26) என்ற நபரை சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய 60 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக அவர் வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு செல்வரமேஷை நேற்று கைது செய்ததோடு, அவரிடமிருந்து 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார்.
இதேபோல் திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை, சாந்திநகர் மணிக்கூண்டு அருகில் நேற்று மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பாளையங்கோட்டை, சமாதானபுரத்தைச் சேர்ந்த முத்தையா மகன் செல்வம் (வயது 40) என்பவரை சோதனை செய்தனர். அப்போது அவர் 10 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து செல்வத்தை கைது செய்ததோடு, அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.