நெல்லையில் 298 கிராம் கஞ்சா பறிமுதல்: விற்றவர் கைது

1 week ago 5

நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் திருமலைகுமார் தலைமையிலான போலீசார் நேற்று (10-4-2025) ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கல்லிடைக்குறிச்சியில் இருந்து மூலச்சி செல்லும் ரோட்டில் உள்ள சீராங்குளத்துக்கரை அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த தென்காசி மாவட்டம், செங்கோட்டை மேலூர், சதியன்மேடு பகுதியை சேர்ந்த மகேஷ் (வயது 56) என்பவரை சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய 298 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மகேஷை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 298 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Read Entire Article