
நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியில் எஸ்.ஐ. சக்தி நடராஜன் தலைமையிலான காவல் துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சத்திய வாகீஸ்வரர் கோவில் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சிங்கிகுளத்தைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 26) என்பவரை சோதனை செய்தனர். அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து எஸ்.ஐ. சக்தி நடராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மணிகண்டனை நேற்று (29.3.2025) கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்.