நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா? - மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்த தகவல்

3 months ago 14

நெல்லை,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனைத்தொடர்ந்து தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (21-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவ.21) விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே முடிவெடிக்கலாம் என்று மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார் அறிவித்துள்ளார்.

இதனிடையே நெல்லையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றும், வதந்தி பரப்பியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Read Entire Article