
புதுடெல்லி,
உலக செஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை (கிளாசிக்கல்) சர்வதேச செஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி முன்னாள் உலக சாம்பியனான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் (2,833 புள்ளி), ஜப்பானின் ஹிகாரு நகமுரா (2,802) முறையே முதல் 2 இடங்களில் தொடருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சென்னையை சேர்ந்த 18 வயது குகேஷ் (2,787) 10 புள்ளிகள் அதிகரித்து 2 இடம் முன்னேற்றம் கண்டு 3-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும்.சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா (2,758) 8-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு டாப்-10 இடங்களுக்குள் வருவது இதுவே முதல்முறையாகும்.
வீராங்கனைகள் தரவரிசையில் இந்தியாவின் கோனேரு ஹம்பி (2,528) 6-வது இடத்திலும், ஆர்.வைஷாலி (2,484) 14-வது இடத்திலும், ஹரிகா (2,483) 16-வது இடத்திலும் இருக்கின்றனர்.