நெல்லை மாவட்டத்திற்கு வருமா ஆலங்குளம் தொகுதி? - அமைச்சர் கே.என்.நேரு பதில்

23 hours ago 1

சென்னை,

தமிழக சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது, ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன், ஆலங்குளம் தொகுதியில் பாப்பாகுடி ஒன்றியம் நெல்லை மாவட்டத்திலும், மற்ற ஒன்றியம் தென்காசி மாவட்டத்தில் வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்று பேசினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பாப்பாகுடி ஒன்றியம் நெல்லை மாவட்டத்தில் உள்ளது. நெல்லை சட்டமன்ற தொகுதியில் 2 கிராமங்கள் அதில் வருகிறது. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதி யூனியன் இருப்பது சரியா என்று வருவாய் துறை அமைச்சரிடம் பேசி உள்ளேன்.

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதி உள்ளது. இதில் ஆலங்குளம் வருகிறது. ஆனால் ஆலங்குளம் மட்டும் தென்காசியில் வருகிறது. முதலமைச்சரின் அனுமதியை பெற்று ஆலங்குளம் மற்றும் நெல்லை மாவட்டத்திற்கு வந்து விடும் என்றால் ஒரே மாவட்டமாக இருக்கும் என்று கூறி உள்ளேன் என்று பதில் அளித்தார்.

அப்போது பேசிய பேரவைத் தலைவர், இதை எல்லாம் 2 மாதத்திற்கு முன்பே பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு மாவட்ட ஆட்சியரிடம் கூறி விட்டதாக கூறினார்.

Read Entire Article