
திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை நான்கு வழி சாலையில் பொட்டல் சந்திப்பு அருகே இன்று பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி மற்றும் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்ய முயன்றபோது, நிறுத்தாமல் தப்பி சென்ற அந்த வாகனங்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர்கள் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மேலப்பாளையத்தைச் சேர்ந்த சீனிமாரியப்பன் (வயது 33), திருநெல்வேலி, சங்கர்நகரைச் சேர்ந்த செல்வம்(40), மேலநத்தத்தைச் சேர்ந்த சுரேஷ்(39), பேட்டையைச் சேர்ந்த அப்துல்காதர்(31), பாட்டப்பத்தைச் சேர்ந்தவர்களான ஆறுமுகம்(39), லெட்சுமணன்(37) ஆகிய 6 பேரை கைது செய்து, வாகனங்கள் மற்றும் கஞ்சாவை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.