
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
நெல்லை மாநகர எல்லைக்குள் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு அச்சம், ஆபத்து மற்றும் தீங்கு விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை சென்னை மாநகர காவல் சட்டம் பிரிவு 51-Aன் படி மாநகர எல்லைக்குள் நுழைய தடை விதிக்கும் அதிகாரம் காவல் ஆணையருக்கு உள்ளது. அதன்படி திருநெல்வேலி மாநகரம், பேட்டை, பாண்டியாபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்த முருகன் மகன் முத்துக்குமார் என்பவர் 28.4.2025-ல் இருந்தும் மற்றும் பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை, இளங்கோநகர், குட்டத்துறை, கீழத்தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் படுகையூர் பாஸ்கர் என்பவர் 29.4.2025-ல் இருந்தும் 6 மாதங்களுக்கு நீதிமன்ற வழக்கு விசாரணை, காவல்துறை வழக்கு விசாரணை போன்ற காரணங்களைத் தவிர திருநெல்வேலி மாநகரின் காவல் எல்லைக்குள் நுழைய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநகர எல்லைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட முத்துக்குமார் மீது 6 வழக்குகளும், படுகையூர் பாஸ்கர் மீது 34 வழக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.