
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் உருளை வடிவ பானைகள், உலை, கால்நடை எலும்புகள், இரும்பு பொருட்கள், விலைமதிப்பற்ற கற்களால் ஆன மணிகள் உள்பட பல்வேறு தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த போருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த அருங்காடியகத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் சினிமா துறையின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவர் இன்று குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்றார். மனைவி, மகளுடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்ற சிவகார்திகேயன் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பழங்கால தொன்மையான பொருட்களை பார்வையிட்டார்.