நெல்லை: தலையில் கல்லை போட்டு கொலை முயற்சி- கொலை வழக்குப்பதிவு

5 hours ago 3

நெல்லை மாவட்டம், கூடங்குளம் காவல் நிலைய சரகத்தில் 26.4.2025 அன்று மாலையில் நடைபெற்ற கொலை முயற்சி சம்பவத்தில் கூடங்குளம், வடக்கு தெருவை சேர்ந்த சேகர் (வயது 49) என்பவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் அங்கே சிகிச்சை பலனின்றி நேற்று (29.4.2025) உயிரிழந்தார்.

இவ்வழக்கில் அடையாளம் தெரியாத நபர்களால் தலையில் கல்லை போட்டு கொலை முயற்சி செய்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளான ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (23) மற்றும் அவரது உடன்பிறந்த சகோதரரான வைணவபெருமாள் (26) ஆகிய 2 பேரும் காவல் துறையின் துரித நடவடிக்கையால் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் ஏற்கனவே (27.4.2025) அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கானது தற்போது கொலை வழக்காக மாறுதல் செய்யப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

Read Entire Article