
திருநெல்வேலி மாநகரம், சந்திப்பு பகுதியிலுள்ள ஒரு தனியார் டீ கடை அருகில் உள்ள உணவகத்தில் 25.04.2025 அன்று உணவருந்தி கொண்டிருந்த பேட்டை, காந்திநகரை சேர்ந்த சுடலைமுத்து மகன் வெற்றிவேல் (வயது 47) என்பவரை, ஆனந்த்(எ) படையப்பா மற்றும் பேச்சிமுத்து ஆகியோர் வெற்றிவேலின் தம்பி மாரிராஜ் கொடுக்க வேண்டிய ரூ.10 ஆயிரம் பணத்தை வெற்றிவேலிடம் கேட்டுள்ளனர்.
வெற்றிவேல் அதை எனது தம்பியிடம் சென்று கேளுங்கள் என்று சொன்ன காரணத்தினால் அவரை, அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி, மதுபாட்டிலால் தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தியுள்ளார். இதனையடுத்து வெற்றிவேல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.