
நெல்லை மாவட்டம், தேவர்குளம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் தொடர்புடைய மூவிருந்தாளி, வடக்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் விஜயராஜ்(எ) விஜயகுமார் (வயது 33) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நபர் கொலை முயற்சி, அடிதடி, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மானூர் வட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர் மேற்சொன்ன நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.
நெல்லை மாவட்டம், சீவலப்பேரி பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் தொடர்புடைய அக்ரஹார தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் வலதி(எ) ஆறுமுகம் (23) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நபர் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கங்கைகொண்டான் வட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர் மேற்சொன்ன நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரைப்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில் விஜயராஜ்(எ) விஜயகுமார், வலதி(எ) ஆறுமுகம் ஆகிய 2 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று (30.4.2025) அடைக்கப்பட்டனர்.