நெல்லை: கஞ்சா விற்ற 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

1 day ago 3

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான ஆறுமுகபாண்டி மகன் கணேஷ்முத்துகுமார் (வயது 37), நடராஜன் மகன் முருகபெருமாள் (வயது 27), மதியழகன் மகன் ரமேஷ் (வயது 24), கோவிந்தசாமி மகன் சக்திவேல் (வயது 28), லூர்து அற்புதராஜ் மகன் அலெக்ஸ்சற்குணம் (வயது 27) மற்றும் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ரவி சுப்பையா மகன் முத்துகுமார் (வயது 26) ஆகிய 6 நபர்கள் திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.

எனவே இந்த 6 பேர் மீதும் திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர்(கிழக்கு) வினோத் சாந்தாராம், பாளையங்கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர்(பொறுப்பு) ஆவுடையப்பன், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, நேற்று (23.03.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர். 

Read Entire Article