
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையிலுள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோவிலில் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான பக்தி நெறி பயிற்சி வகுப்புகள் அடங்கிய 'இஸ்கான் சம்மர் கேம்ப்' வருடந்தோறும் நடைபெறுகிறது. அவ்வகையில் இந்த வருடம் 'ராமாயணம் கற்பிக்கும் பாடங்கள்' என்ற தலைப்பில் வகுப்புகள் நடைபெறுகின்றன.
இந்த சம்மர் கேம்பில் ராமாயணக் கதைகள், ஸ்லோகங்கள், பஜனை பாடல்கள், ஸ்ரீராம நாம சங்கீர்த்தனம், ராமாயண ஓவியங்கள், ராமாயண நாடகம், நன்னெறி, ஸ்ரீராமரின் பரந்த மனப்பான்மை, பரதனின் அரப்பணிப்பு, ஹனுமானின் சேவை, சீதா தேவியின் தவம், மஹாமந்திர தியானம் என 12 வகுப்புகள் இடம்பெறுகின்றன.
மேலும், நல்ல பழக்கங்களை பழகுதல், தவறான விஷயங்களை கைவிடுதல், பெற்றோர்களுக்கு உதவுதல், ஆசிரியர்களின் அறிவுரைகளை பின்பற்றுதல், கல்வியில் கவனம் செலுத்துதல் போன்றவற்றிற்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
11 வயது முதல் 18 வயது வரையுள்ள ஆண், பெண் இரு பாலருக்கும் தனித்தனியாக வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்களுக்கு மே 14, 15, 16 ஆகிய தேதிகளிலும், மாணவிகளுக்கு மே 22, 23, 24 ஆகிய தேதிகளிலும் வகுப்புகள் நடத்தப்படும்.
இதேபோல் 6 வயது முதல் 10 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு (இரு பாலருக்கும்) மே 22, 23, 24 ஆகிய தேதிகளில் வகுப்பு நடத்தப்படும்.
பயிற்சி நாட்களில் தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை 4 வகுப்புகள் வீதம் மொத்தம் 12 வகுப்புகள் நடைபெறும். 12 வகுப்புகளிலும் பங்கேற்று வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு இஸ்கான் வழங்கும் பக்திநெறி பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த பயிற்சியில் பங்கேற்க திருநெல்வேலி இஸ்கான் கோவிலில் வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். முன்பதிவு குறித்த விபரங்களுக்கு 7558148198 என்ற இஸ்கான் வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முன்பதிவு செய்ய கடைசி நாள் மே 7ம் தேதி (நாளை) ஆகும்.
வகுப்புகள் நேரிடையாக இஸ்கான் கோவில் வகுப்பறையில் நடைபெறும். முன்பதிவு செய்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காலை 9:45 மணிக்குள் இஸ்கான் கோவிலுக்கு அழைத்து வந்து விடவேண்டும். மாலை 4:00 மணிக்கு திரும்ப அழைத்துச் செல்லலாம், என இஸ்கான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.