நெல்லை: இரு பிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு- 4 பேர் கைது

17 hours ago 1

நெல்லை மாவட்டம், மானூர் அருகே எட்டான்குளம், தெற்கு தெருவை சேர்ந்த கோகுல் (வயது 24), முத்து (வயது 20), சுடலைமுத்து (வயது 18), அந்தோணிராஜ் (வயது 23) ஆகிய 4 பேரும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினையைத் தூண்டும் வகையில் வீடியோ மற்றும் புகைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை பதிவு செய்தும் சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர்.

இதுகுறித்து மானூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சமூக வலைத்தளங்களில் இரு தரப்பினரிடையே பிரச்சினையைத் தூண்டும் விதமாக வீடியோவை வெளியிட்ட கோகுல், முத்து, சுடலைமுத்து, அந்தோணிராஜ் ஆகிய 4 பேரையும் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இது போன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

Read Entire Article