நெல்லை அருகே அரசு பஸ் - மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் பலி

5 months ago 21

நாங்குநேரி

நெல்லை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை மூன்றடைப்பு அருகே அரசு பஸ்சும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்கள் நாங்குநேரி அருகே உள்ள படலையார் குளம் ஜே ஜே நகரைச் சேர்ந்த சுடலை மகன் மாயாண்டி மகேஷ்( வயது 20) , முதலைக்குளம் செல்வராஜ் மகன் உசிலவேல் (36) என அடையாளம் தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக மூன்றடைப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article