நெல்லை அருகே 90 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த 78 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு

5 months ago 37
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே 90 அடி ஆழம் கொண்ட நீருள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்த 78 வயது பெண்ணை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். சுண்டவிளை கிராமத்தைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவரது மனைவி அன்ன பாக்கியம் அதிகாலை வீட்டின் பின்புறம் சென்ற போது விவசாய கிணற்றில் கால் தவறி விழுந்து உள்ளே தத்தளித்தபடி சத்தமிட்டதாக தெரிகிறது. அவரது கூச்சலைக் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து 20 நிமிடத்தில் அன்ன பாக்கியத்தை மீட்டனர். தலையில் லேசான ரத்த காயமடைந்திருந்த அப்பெண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
Read Entire Article