நெய்தவாயல் ஊராட்சியில் மழை பாதிப்பு பகுதிகளை எம்எல்ஏ ஆய்வு

2 months ago 10

 

பொன்னேரி, நவ.18: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட நெய்தவாயல் ஊராட்சியில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் கணபதி நகர் மற்றும் வி.ஏ.எஸ். கார்டன் பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. இந்நிலையில் 2 நாட்களாகியும் மழை நீர் வெளியேறாததால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

இதுகுறித்து, தகவலறிந்த பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டு, உடனடியாக பொக்லைன் இயந்திரம் மூலம் தண்ணீர் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார். உடன், நெய்தவாயல் ஊராட்சி மன்ற தலைவர் பாலன், கிராம நிர்வாக அலுவலர் வினோத், ஊராட்சி செயலாளர் மாது, காங்கிரஸ் மாவட்ட செயலாளர் வினோத் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும், எம்எல்ஏ துரை சந்திரசேகர் நெய்தவாயல் ஊராட்சியில் எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது என்பதை கேட்டறிந்து, அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

The post நெய்தவாயல் ஊராட்சியில் மழை பாதிப்பு பகுதிகளை எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article