நீலகிரி மாவட்டம் பந்தலூர், சேரங்கோடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 40 வீடுகளுக்கு மேல் இடித்து சேதப்படுத்தியதாக கூறப்படும் சிடி16 என்ற புல்லட் காட்டு யானையை வனத்துறையினர் 2 மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
அய்யங்கொள்ளி பகுதியில் முகாமிட்டு இருந்த யானை மயக்க ஊசி செலுத்திய சிறிது நேரத்தில் மயக்க நிலையை அடைந்தது. பின்னர் இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் வாகனத்தில் ஏற்றினர்.
முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட யானையை கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.