நீலகிரி மாவட்டம் ஊசிமலை காட்சி முனை அருகே தேனீக்கள் கொட்டி சுற்றுலா பயணி உயிரிழப்பு..!!

22 hours ago 3

உதகை: நீலகிரி மாவட்டம் ஊசிமலை காட்சி முனை அருகே தேனீக்கள் கொட்டி சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளார். நீலகிரி மாவட்டம் உள்ளூர் விடுமுறையை அடுத்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அவ்வாறு கேரள மாநிலம் கள்ளிக்கோட்டையை சேர்ந்த ஜாபிர் வயது (23) மற்றும் அவரது நண்பர் வனத்துறையினர் தடை செய்துள்ள பகுதிக்கு சென்று அத்துமீறியுள்ளனர். அப்போது இருவரையும் தேனீக்கள் கடிக்க ஆரம்பித்துள்ளது.

இதனை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், உடனடியாக வனத்துறையினர் அங்கு சென்று உயிருக்கு போராடிய ஒருவரை கேரள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும், ஜாபிரை அதிக அளவிலான தேனீக்கள் கொட்டிய நிலையில் அவர் சுயநினைவிழந்தார். அருகில் யாரும் செல்ல முடியாத நிலையில் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் கவச உடை அணிந்து பாறைகளில் சிக்கி உள்ள இளைஞரை மீட்கும் முயற்சியில் உள்ளே சென்றனர் ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், அவரது உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

 

The post நீலகிரி மாவட்டம் ஊசிமலை காட்சி முனை அருகே தேனீக்கள் கொட்டி சுற்றுலா பயணி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article