உதகை: நீலகிரி மாவட்டத்தில் எந்தவொரு அரசு பள்ளியையும் மூடும் திட்டம் இல்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். நீலகிரி அரசுப் பள்ளிகள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் 287 அரசு நடுநிலை, தொடக்க பள்ளிகள் உள்ளன. அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம், மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
The post நீலகிரி மாவட்டத்தில் அரசு பள்ளியை மூடும் திட்டம் இல்லை: முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு appeared first on Dinakaran.