நீலகிரி பொங்கல் விழா கலை, இலக்கிய போட்டிகள்

2 months ago 7

கூடலூர், டிச.5: தமிழ்ச்சங்கத்தின் 24-ம் ஆண்டை ஒட்டி நடத்தப்பட்ட மாணவர் கலை இலக்கிய போட்டிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், ஆத்திச்சூடி சொல்லுதல் கவிதை, கட்டுரை, ஓவியம் சிறுகதை எழுதுதல் என பல்வேறு போட்டிகளுடன் நடன போட்டிகளும் நடத்தப்பட்டன. கூடலூர் பந்தலூர் பகுதிகளில் இருந்து 1300-க்கும் மேம்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 50 ஆசிரியர்கள் நடுவர்களாக பங்கேற்று போட்டிகளை நடத்தினர். கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு தமிழ்ச்சங்க தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார்.

குறிஞ்சி ராமமூர்த்தி குத்து விளக்கேற்றினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் யோகேஸ்வரி, ஜெகநாதன், மேகனதாஸ், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்ச்சங்க செயலாளர் நாகநாதன் அனைவரையும் வரவேற்றார். கலைச்செல்வன், சசிதரன், புனித குமார், மதியழகன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் இணைச்செயலாளர் வழக்கறிஞர் கணேசன் நன்றி கூறினார்.

The post நீலகிரி பொங்கல் விழா கலை, இலக்கிய போட்டிகள் appeared first on Dinakaran.

Read Entire Article