
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நவீன். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு நண்பர்களுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இன்று சுற்றுலா சென்றார்.
அப்போது குன்னூர் அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் முன்புறத்தில் புகை வந்ததால் நவீன் காரை ஓரமாக நிறுத்தினார். உடனடியாக காரில் இருந்த அனைவரும் வெளியேறினர்.
இதனையடுத்து கார் மளமளவென பற்றி எரிய தொடங்கியது. உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். மேலும் கார் முற்றிலும் சேதமானது. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 8 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இந்த விபத்தால் அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதைக்கு திருப்பி விடப்பட்டன.